2018 தமிழக பட்ஜெட்:உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்த அரசு திட்டம்!

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், 2019 ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக  அறிவித்தார். முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment