BREAKING NEWS:நாடு முழுவதும் ஜூலை 20-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!65 லட்சம் லாரிகள் பங்கேற்பு!

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்,பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ஆம் தேதி முதல் தேசிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக  முடிவு செய்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் சண்முகப்பா, வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்திவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  காப்பீட்டுக் கட்டணம், 120% வரை அதிகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல்,டீசல் விலை உயர வாய்ப்பு?

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலால் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால் ஒரே நேரத்தில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நிலவரம்: 

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-17 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.78.16 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.70.49 காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment