18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆபத்து இருக்கா,இல்லையா?யாருக்கு தீர்ப்பு சாதகம்?பாதகம்?

உயர்நீதிமன்றம்  எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தால், அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை.   தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களை கழித்துவிட்டுப் பார்க்கும்போது, சட்டப்பேரவையின் பலம் 216 ஆக உள்ளது. இதில் சபாநாயகரையும் சேர்த்து அதிமுக-வின் பலம் 117 ஆக உள்ளது. இந்த 117 எம்எல்ஏ.க்களில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் அரசுக்கு எதிரான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.   அதேசமயம்,அறந்தாங்கி எம்எல்ஏ … Read more

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:கடைசி நேரத்தில் தினகரனை கைவிட்ட இரண்டு எம்.எல்.ஏக்கள்!ஏக்கத்தில் தினகரன் அணி

டிடிவி தினகரன் இல்லத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல் .ஏக்கள் திருப்போரூர் கோதண்டபானி, தஞ்சாவூர் ரெங்கசாமி, சோலிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்ரமணி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் வந்தனர். தற்போது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் துவங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை ஆலோசனை கூட்டத்தில் விளத்திக்குளம் உமாமகேஸ்வரி, குடியாத்தம் ஜெயந்தி பத்பநாபன் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்கவில்லை என்று தகவல் … Read more

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:உச்சகட்ட பதற்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி!சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் தீவிர ஆலோசனை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில்: இன்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், … Read more

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜர்!

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ்  ,ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி சாட்சியம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தர விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அவர் மரணம் அடைந்தபோதும் … Read more

IND vs AFG Test match :ரஷித் கானை ஓட விட்டு சதம் அடித்த தவான்!சதத்தில் புதிய சாதனை படைத்த தவான்!

இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது..இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் … Read more

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் துவக்கம்!

டிடிவி தினகரன் இல்லத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல் .ஏக்கள்   திருப்போரூர் கோதண்டபானி, தஞ்சாவூர் ரெங்கசாமி, சோலிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்ரமணி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் வந்துள்ளனர். தற்போது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் துவங்கியது. இன்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும்!சாதகமாக வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன்!எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.   மேலும் அவர் கூறிகையில்,எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன். நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது; நீதிமன்றத்தை மதிக்கிறோம்  என்றும் தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக உள்ளோம். இடைத்தேர்தலில் 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம்.தகுதி … Read more

திண்டுக்கல் இளைஞர் காங்கிரஸ் சார்பாக மறியல் போராட்டம் ! 25 பேர் கைது!

திண்டுக்கல் காமராஜர் பேருந்துநிலையத்தில் இலவசமாக செயல் பட்ட கழிப்பறையை கட்டண கழிப்பிடமாக மாற்றிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக மறியல் போராட்டம்  நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜர் பேருந்துநிலையத்தில் இதுவரை இலவசமாக செயல்பட்டுவந்த 6 சிறுநீர் கழிப்பறையை கட்டண கழிப்பிடமாக மாற்றிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம்தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7பேர் ஆஜர்!

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம்தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7பேர் ஆஜராகி உள்ளனர்.திருச்சி விமானநிலையத்தில் நாம்தமிழர்-மதிமுகவினர் மோதல் வழக்கில் ஆஜராகினர். உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் பெற்ற நிலையில் பிணைத்தொகையை செலுத்த சீமான் ஆஜராகி உள்ளார். முன்னதாக  திருச்சி விமானநிலையத்தில் கடந்த 19ம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விழுப்புரம் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்!

அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கைகளில் தீபங்களை ஏந்தி வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.