சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜர்!

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ்  ,ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி சாட்சியம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தர விட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அவர் மரணம் அடைந்தபோதும் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் தற்போது ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஜார்ஜ், நீதி பதியின் பல்வேறு கேள்வி களுக்கு பதில் அளித்தார். நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப் பட்டது.

தொடர்ந்து, இன்றும் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீண்டும் ஆஜரானார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment