#BREAKING : ஐஏஎஸ் பணி விதி திருத்தத்தை கைவிடுக – பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் இந்த முடிவினை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு, தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த முடிவினை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஒன்றிய அரசு … Read more

‘உதவி வாங்கிய கைகளின் ஈரம்கூட இன்னும் காயவில்லை’ – இந்த உரிமை இலங்கை அரசுக்கு இல்லை ..! – ராமதாஸ்

தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் ட்வீட். கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் … Read more

#BREAKING : முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்..!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி காலமானார்.  தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி.  தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர் நாகசாமி. தற்போது சென்னையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு இந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் – எச்.ராஜா

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு, தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா ட்வீட்.  தஞ்சாவூர் அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை, கடந்த 2 ஆண்டுகளாக சிரியர் ராக்லின் மேரி விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி … Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்..!

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு  வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா அக்கடற்கரை சாலையில், உள்ள நேதாஜியின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு … Read more

ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது – ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more

சுபாஷ் சந்திரபோஸ் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்! – ஓபிஎஸ்

“வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்” அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம் என ஓபிஎஸ் ட்வீட். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு  வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய இராணுவத்தை உருவாக்கி பிரிட்ஷ் அரசிற்கு எதிராக … Read more

எனக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பதற்கு முன் இந்த பெயர் தான் சூட்ட திட்டமிட்டிருந்தனர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர்  கருணாநிதி அவர்கள் கம்யுனிசத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எனவே, ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பூச்சி முருகன் இல்ல விழா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.  கலைஞர் … Read more

இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த  கொரோனா தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று … Read more

நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலையணிவித்து மரியாதை..!

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை போராட்ட வீரரும், வங்கத்துச் சிங்கம், இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று மக்களால் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீரத்தை போற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தங்களது இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். … Read more