ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது – ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் இரண்டு தவணை தடுப்பூசிக்கு  இடையிலான கால அளவை குறைத்துள்ளனர். இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தினால், மக்கள் நினைவில் கொள்ளவும் எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.