ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது சிரமமாக உள்ளது! அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம்  என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேரவையில் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  தாமிரத்தை வாங்கி அமைக்க வேண்டியுள்ளதால் மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் மூடலால் மாற்று இடத்தில் காப்பர் வாங்கப்படுவதாக பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment