முதலமைச்சர் பழனிசாமி கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வருகை ?

முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வருகிறார்.

நேற்று இரவு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார் .

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் நேராக தனது இல்லத்திற்கு சென்றார்.இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment