கருணாநிதியின் உடல்நிலை என்ன ?உண்மையை உடைத்த முக.அழகிரி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து முக.அழகிரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர்  கருணாநிதி காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கபட்ட நிலையில் அங்கிருந்து இரவு அவரது குடும்பத்தார்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.குறிப்பாக  ராஜாத்தியம்மாள் முக. ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின், துரைமுருகன் அனைவரும் இரவு அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

இதேபோல் முக .அழகிரியும் அவரது வீட்டிற்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதால் தான் அனைவரும்  வீட்டிற்கு செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment