கன்னியாகுமரியில் பல்வேறு கிராமங்களில் ராட்சத கடல் அலை!பீதியில் மீனவர்கள் !

கன்னியாகுமரியில் பல்வேறு கிராமங்களில் கடல்சீற்றத்தால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது ராட்சத கடல் அலையால் அழிக்கால், பிள்ளைதோப்பு, முட்டம் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது கடல்நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வெளியேறினர்.

கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அச்சத்தில் உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சீறிப்பாய்ந்து வருவதால் கடலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடித்த தடைக் காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடனரே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளதால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார். கடல் சீற்றத்தால் வல்லவிளையில் 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, மண்டைக்காடு புதூரில் சாலைகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment