89வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.! 4 மாநிலங்களுக்கு அழைப்பு.!

Cauvery River

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தமிழகம், கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவு எட்டப்படும். முதலில் காவிரி ஒழுங்காற்று மையம், மேற்கண்ட மாநில அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நீர்நிலைகளில் இருப்புகளை அறிந்து எந்தளவு தண்ணீரை திறந்துவிடலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வெளியிடும். காவிரி ஒழுங்காற்று மையத்தால் மாநில அரசுகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. யாரும் … Read more

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கேள்வி கேட்கணும்.! அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.!

Minister Mano Thangaraj

தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் ஊர் திரும்பினர் – தமிழக அரசு

TNGovt

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் இருக்கும் இந்தியர்களை ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. இஸ்ரேலில் சுமாா் 18 ஆயிரம் இந்தியா்கள் வசித்து வருவதாக கூறப்பட்டது. அவர்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த அக்டோபர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. அதாவது, … Read more

போர் என்பதே கொடூரமானது! உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது – முதல்வர்

Tamilnadu CM MK Stalin

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து உச்சகட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. உலக நாடுகள் கண்டங்களை தெரிவித்து, போரை நிறுத்த இருதரப்பும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், ஹமாஸ் அமைப்பை ஒடுக்கப்படும் என இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இந்த போரால் ஆயிரக்கணக்கான உயிரிகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், … Read more

நாவலூர் சுங்க சாவடியில் நாளை முதல் கட்டணமில்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.! 

Tamilnadu CM MK Stalin

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , களத்தில் முதலமைச்சர் எனும் திட்டம் கீழ், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள், அதன் செயல்முறை பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து அதிகாரிகள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், அரசு திட்டம் அறிவித்தால் அதனை தொய்வு இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும். ஒரு திட்டம் … Read more

முல்லை பெரியாறு அணையில் பிரமாண்ட கார் பார்க்கிங்.? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு.!

Mullai Periyar Dam - Supreme court of India

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முல்லை பெரியாறு அணை நீர் தேக்கத்திற்கு ஒரு கிமீக்கு அப்பால் கார் பார்க்கிங் அமைந்துள்ளது. இந்த கார் பார்க்கிங் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு அருகே இருப்பதால், வாகனங்கள் எழுப்பும் சத்தம் வனவிலங்குகளை குறிப்பாக புலிகளை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது என வனத்துறை கேரள அரசிடம் கூறியுள்ளது. இதனை அடுத்து முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் … Read more

இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – பாமக

PMK Founder Dr Ramadoss

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கோடியக்கரை அருகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்து கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 9 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இரு படகுகள் சேதமடைந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளும், பலநூறு கிலோ … Read more

Leo FDFS: காலை 7 மணி காட்சிக்கும் கிடையாது..விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

லியோ படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதலில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது … Read more

களஆய்வு கூட்டம்: காவல்துறையினர் மீது நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Tamilnadu CM MK Stalin

சமீப காலமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், களஆய்வு கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

Leo Morning Show: உள்துறை செயலருடன் லியோ படக்குழு சந்திப்பு!

leo special show

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் படத்தயாரிப்பாளர் தரப்பு மனு அளித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 … Read more