ரொனால்டோ, 4,400 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்தார்.!

ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் தங்கள் கிளப் அணியில் இணையுமாறு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது … Read more

4,200 கோடி ஒப்பந்தம், ரொனால்டோவிற்கு மெடிக்கல் டெஸ்ட்டை புக் செய்த அல்-நசர் கிளப்!

சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், ரொனால்டோ அணியில் இணைவதற்கு முன் அவருக்கான மெடிக்கல் டெஸ்ட்டை அட்டவணையிட்டுள்ளதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், போர்ச்சுகல் அணியின் ரொனால்டோவை தங்கள் கிளப்பில் இணையுமாறு கேட்டுள்ளதாகவும் அதற்கு ரொனால்டோ, மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார். இந்த நிலையில் அல்-நசர் கிளப், ரொனால்டோவிற்கான மருத்துவ பரிசோதனையை அட்டவணையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை வருட … Read more

ரொனால்டோ நீங்கள் தான் எப்போதும் சிறந்தவர் G.O.A.T! கோலி புகழாரம்.!

கோப்பை ஒருபோதும் சிறந்த வீரரை முடிவு செய்வதில்லை! நீங்கள் சிறந்த பிளேயர் என ரொனால்டோவை கோலி புகழ்ந்துள்ளார். கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் இந்த தொடர் தான் ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படி போர்ச்சுகல் அணியால் இந்த தொடரில் மேலும் நீடிக்க முடியவில்லை. ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான … Read more

நான் ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் – விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை  கூறியுள்ளார். முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என கூறியுள்ளார். ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். … Read more

கோகோ-கோலா பாட்டில்கள் அகற்றம்-ரொனால்டோவின் வழியில் வார்னர்?…!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் … Read more

பிரீமியர் லீக்:மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரொனால்டோ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ப்ரேஸ் மற்றும் ப்ரூனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோரின் கோல்கள் நியூகேஸ்டில் அணிக்கு எதிராக வெற்றி பெற உதவியது. கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,முன்னதாக கடந்த … Read more

கோகோ கோலா பாட்டிலை அகற்றிய ரொனால்டோ- 4 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்!

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை அகற்றிதால் கோகோ கோலா நிறுவனத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசினார். பேசுவதற்கு முன்னதாக மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்குமாறு ரசிகர்களுக்கு … Read more

பாலியல் புகார் விவகாரம் – ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரிய முன்னாள் மாடல் அழகி!

2009ஆம் ஆண்டு தன்னை கற்பழித்ததாக கூறிய முன்னாள் அமெரிக்க மாடல் கேத்ரின் மயோர்கா ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரியுள்ளார். போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி கேத்ரின் மயோர்காவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அமெரிக்க முன்னால் மாடல் அழகி கேத்ரின் மயோர்கா அவர்கள் தனக்கு ரொனால்டோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை … Read more

Brazil vs Peru: ஹாட்ரிக் கோல்களை அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்த நெய்மர்!

நேற்று நடைபெற்ற பிரேசில் – பெரூ இடையிலான போட்டியில் நெய்மர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்ததன் மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிரேசில் – பெரூ அணிகள் மோதியது. கொலம்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய முதல் 6 ஆம் நிமிடத்தில் பெரூ அணியின் ஆந்த்ரே கரிலோ, முதல் கோலை … Read more

கொரோனா எதிரொலி: ஹோட்டல்களை மருத்துவமனையாக மாற்றிய ரொனால்டோ!

கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். உலகையே அச்சுறுத்தி வருக கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதன் விளைவாக பல விளையாட்டு போட்டிகள் ரத்தானது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும்விதமாக ரொனால்டோ நிதி உதவி அளித்துள்ளார். மேலும்,  தனது ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனையாக மாற்ற அவர் முன்னுக்குவந்தார்.