ஆர்.கே நகர் தேர்தல் : 17ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ..

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் -சுற்று- 17 டிடிவி தினகரன் (சுயேச்சை) -81,315 மதுசூதனன் (அதிமுக) – 44,522 மருதுகணேஷ் (திமுக) -22,962 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,645 கரு. நாகராஜன் (பாஜக)- 1,236

ஆர்.கே நகர் தேர்தல் : 17 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ..

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்: சுற்று- 17: ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 76,701 மதுசூதனன் ( அதிமுக ) : 41,529 மருதுகணேஷ் ( திமுக ): 21,827 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,535 கரு நாகராஜன் ( பாஜக ) : 1,128 நோட்டா : 2,096 source: dinasuvadu.com

ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்?? என்பதை தினகரனின் முன்னிலை கூறுகிறது: திருமாவளவன்

ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார் எனவும் அதேபோல் மதவாத கட்சியான பாஜக ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதையும் ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது  என ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்  இவற்றை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

கமான்டோ பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம்….

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.   வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். … Read more

டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது-கருத்துக்கணிப்பு முடிவு

  ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பினை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, தினகரன் 37% வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றும், அதிமுக 26% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக 18% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும், பா.ஜ.க., 2% வாக்குகளும், மற்ற கட்சிகள் 17% வாக்குகளும் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. source: dinasuvadu.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குப்பதிவிற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது செய்யபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

இன்று சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.