உள்ளாட்சி தேர்தல்:3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் !மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்ற 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில்  வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு ஆகஸ்ட் 31ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி  மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்! அவைத் தலைவர் வெங்கையா நாயுடு

ஆகஸ்ட் 9ஆம் தேதி  மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.அதேபோல் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.ஜூலை 1ஆம் தேதியுடன் மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் ஜோசப்பின் பதவிக்காலம்  நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சட்டப்பிரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட வழக்கு!உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒத்திவைத்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வருகை …!

மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு  சென்றுள்ளனர். இதற்கு முன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 37,738ஆக  வர்த்தகம்!

186 புள்ளிகள் உயர்ந்து  மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 37,738ஆக  வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 11,409இல் வணிகமாகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதற்கு முன்  கனிமொழி எம்.பி. திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அமித்ஷா- தோனி திடீர் சந்திப்பு ..!பாஜகவிற்கு ஆதரவு கோரி சந்திப்பு …!பாஜகவின் சந்திப்பு டார்கெட் 100000 ..!

நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார். இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  … Read more

கனிமொழி எம்.பி. காவேரி மருத்துவமனைக்கு வருகை ..!

கனிமொழி எம்.பி.  திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இன்றைய (ஆகஸ்ட் 6)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் …!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.96 காசுகளாக செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.29 காசுகளாகவும் செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நாகை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பெரியகுத்தகையில் இருந்து படகில் கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடலோர காவல்படை இலங்கையை சேர்ந்த சக்திவேல், தமிழகத்தை சேர்ந்த ரமேஷ் கைது செய்து  படகை  பறிமுதல் செய்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.