விடைபெறுகிறேன்.. நன்றி.! கண்கலங்கிய நியூசிலாந்து வீரர்.!

நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய நீல் வாக்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இவர் 12 வருட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி, 260 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவர் தற்போது, தனது 37-வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2021 ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் … Read more

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

Most Corruption Countries - CPI Ranking

உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு … Read more

#T20 WorldCup 2022: அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் … Read more

#T20 WorldCup 2022: ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் எடுத்து அபாரம்! அயர்லாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இது சூப்பர்-12இல் கடைசி போட்டி, மேலும் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கும். அயர்லாந்து அணிக்கு இன்றைய போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் … Read more

#T20 World Cup 2022: வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179  குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் … Read more

#T20 World Cup 2022: இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பு! பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அதிரடியுடன் 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் … Read more

நியூசிலாந்து & வங்கதேசத்திற்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு – பிசிசிஐ

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்துக்கான டி-20 அணியை ஹர்டிக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷாப் பந்த் துணை கேப்டனாகவும், உம்ரான் மாலிக், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷாப் பந்த் துணை கேப்டனாகவும் இடம் பெற்றுள்ளனர். டி-20 இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & W), ஷுப்மன் கில், இஷான் … Read more

#T20 World Cup 2022: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்! நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில்  இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கிளென் பிலிப்ஸ் தனியாக போராடி சதமடித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக … Read more

#T20 World Cup 2022: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட இருந்தது. ஆனால் தற்போது மெல்போர்னில் பெய்து வரும் மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக மெல்போர்னில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி … Read more

#T20 World Cup 2022: சூப்பர்-12இன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரம்.!

டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் இன்று தொடங்கியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் … Read more