#T20 World Cup 2022: இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பு! பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அதிரடியுடன் 179 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. பவர் பிளே முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து விளையாடுகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment