#T20 World Cup 2022: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்! நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில்  இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கிளென் பிலிப்ஸ் தனியாக போராடி சதமடித்தார்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 10 போர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment