கோவை இனி முதல்வர் ஸ்டாலினின் கோட்டைதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை, இனி கோவை முதலமைச்சர் முக ஸ்டாலினினி கோட்டை தான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் கூறினார். கோவை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் வரவு, செலவு கணக்குகள் விவரத்தினை உரிய அலுவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் … Read more

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி! நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், இணைந்தே நல்லதோர் தமிழநாட்டை அமைப்போம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி பெரும் வெற்றியை ருசித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். … Read more

அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? – கருணாஸ் பரபரப்பு அறிக்கை!

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என கருணாஸ் அறிக்கை. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற, அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்,  அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அஇஅதிமு. சில … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி நிலவரம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374: இதில், 1373 இடங்களுக்கான … Read more

தேர்தல் பார்வையாளர் செல்போன் எண் வெளியீடு – மாவட்ட ஆட்சி தலைவர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்ணை வெளியிட்ட நாமக்கல் ஆட்சியர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் செல்போன் எண்னை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக ஜெ.இன்னசென்ட் திவ்யா., இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இபிஎஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தேதி வெளியானது ..!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்றுமாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து … Read more

இன்றுடன் முடியும் வேட்புமனு தாக்கல் – புதிய வங்கி கணக்கு தொடங்க திண்டாடும் வேட்பாளர்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் … Read more

அடடா…வித்தியாசமாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி – என்ன காரணம் கூறினார் தெரியுமா?

தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் … Read more

அதிமுக கோட்டையாக உள்ள இப்பகுதிகளை அசைத்துப் பார்க்க திமுக தீவிரம்!

அதிமுகவினர் வசம் உள்ள காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றும் முயற்சியில் திமுக எம்எல்ஏக்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால்,அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்,திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்,வெள்ளகோவில் நகராட்சிகள்,மூலனுார் பேரூராட்சி ஆகியவற்றை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்,தமிழக செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் ஈடுபட்டு  வருகிறார். ஏனெனில்,கடந்த, 2011  ஆம் … Read more