11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை 12 ஆம் வகுப்பில் சேர்ந்த பின் எழுதலாம்- செங்கோட்டையன்!

பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்தபடியே பதினொன்றாம் வகுப்பில் வெற்றி பெறாத மாணவர்கள் தேர்வை எழுதலாம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இன்று காலை 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியாகின. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், பதினொன்றாம் வகுப்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து தான் உள்ளது. ஆனால், பதினொன்றாம் வகுப்பில் தோல்வியுற்ற … Read more

ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 3 முதல் தொடக்கம் – சென்னை பல்கலைக்கழகம்!

வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகம் தனது கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் வெளியில் செல்லவே பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு … Read more

இளைஞர்கள் கொரோனாவுக்கு மறைவானவர்கள் அல்ல – எச்சரிக்கும் WHO!

இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் அவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கூறியுள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதுவும் தொடக்கத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் தான் கொரோனா வைரஸின் தாக்கம் பரவுகிறது என கூறப்பட்டதால் இளைஞர்கள் மிகவும் ஆரவாரமாக அவர்கள் ஆசைப்பட்டபடி எல்லாம் வெளியில் சுற்றி திரிந்தனர். ஆனால், தற்போது இளைஞர்களுக்கும் பாதிப்பு அதிகளவில் … Read more

6.76 லட்சமாக உயர்ந்துள்ள கொரோனா உயிரிழப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.76 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணம் ஆகியவர்க ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரானா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 17,476,105 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களில்  10,939,473 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த … Read more

சிறை தண்டனை கைதிகள் மீது தகுந்த காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை கூடாது – டிஜிபி திரிபாதி!

7 ஆண்டுகள் வரை கைது செய்யப்படக் கூடிய சிறை தண்டனைகள் கைதிகள் குற்றங்களில் சரியான காரணங்களின்றி கைது செய்யப்படக் கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்படக் கூடிய குற்றவாளிகள் சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில், அவர்கள் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்கள் காரணமின்றி கைது நடவடிக்கை செய்யப்படக் கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் … Read more

ஆஸ்திரேலியாவின் குடியுரிமை மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு தான் அதிகம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய நாட்டு மக்களுக்கு தான் குடியுரிமை வழங்குவதில் அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று, பல்வேறு காரணங்களால் அந்த நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியுரிமை கோரி பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 முதல் 2020 வரை உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் இரண்டு … Read more

வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் ரேஷன் கடைகள் திறப்பு!

ரேஷன் கடைகள் வருகின்ற வெள்ளிக்கிழமை விடுமுறை இன்றி இயக்கப்படும் எனவும், இதற்கு பதிலாக மாற்று விடுமுறை இன்னொரு நாள் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களாக ரேஷன் கடைகளில் விலையில்லாப் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஒன்றாம் தேதி முதல் பணம் கொடுத்துதான் பெற முடியும். … Read more

1.71 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்போது வரை 1.71 கோடியாக அதிகரித்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அரசாங்கமும் மக்களும் இந்த வைரஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பல மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 17,187,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள 1.71 கோடி பேரில், 670,202 பேர் உயிரிழந்துள்ளனர், 10,697,976 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் … Read more

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மகாராஷ்டிராவில் இன்று வெளியீடு!

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் அனைத்தும் மூடி நிலையில் இருந்தாலும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கொரோனா பரவலுக்கு … Read more

மத்திய பிரதேச அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!

மத்திய பிரதேசத்தின் அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அருகிலிருந்தவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர். மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் துளசி ராம் சில்வாத் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டாலும் சந்தேகத்தின் பேரில் செய்த பரிசோதனையில் கொரோனா இவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தகவலை … Read more