மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பி திறக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும், ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வது முறையாக இல்லை என்பதால் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வரும்படியாக … Read more

வாரத்தில் 6 நாட்களுக்கு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் – அமைச்சர் செங்கோட்டையன்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு முதல் தற்போது வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. இடையிடையே ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடங்கள் பயின்று வந்தாலும் தற்போது தான் நேரில் பள்ளிக்கு சென்று பாடங்கள் பெறுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்த முடிவை ஆய்வு செய்து கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளதாகவும், முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் … Read more

பாடத்திட்டங்கள் குறைப்பு – நாளை மறுநாள் முதல்வரிடம் அறிக்கை, அமைச்சர் செங்கோட்டையன்!

பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் … Read more

எந்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது தீவிரத்தை குறைத்துக் கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆந்திராவில் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் அரை … Read more

பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. தளர்வுகளை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அரசு அறிவித்து இருக்கிறது. இருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில உயர் நீதிமன்றத்தில் … Read more

ஏழை எளிய மாணவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர் – செங்கோட்டையன்!

ஏழை எளிய மாணவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக அரசால் அண்மையில் நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் புதிதாக கொடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களும் கொரோனா காலகட்டத்தில் கூட பாதுகாப்பான முறையில் அன்மையில் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் … Read more

தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது – செங்கோட்டையன்!

தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா பணிகளில் தமிழகம் சிறந்து பணியாற்றுவதாக கூறியுள்ளார். … Read more

மாணவர்களின் உயிர் தான் முக்கியம் – பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல – செங்கோட்டையன்!

மாணவர்களின் உயிர் தான் முக்கியம் எனவும், பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பள்ளி … Read more

பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது? கல்வி முதன்மை அலுவலர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது என்பது குறித்து கல்வி முதன்மை அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? புதிய … Read more