பள்ளிகளை திறக்க கூறிய டொனால்டு ட்ரம்ப்க்கு சரியான பதிலடி கொடுத்துள்ள ட்விட்டர் வாசிகள்!

மீண்டும் பள்ளிகளை திறக்குமாறு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபரிடம் முதலில் உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என பதிலளிக்கும் ட்விட்டர் வாசிகள். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் கொரானா வைரஸ் தொற்று கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா தான். இதுவரை 4,862,174  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 158,929  பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சற்றும் யோசிக்காமல் சில கருத்துக்களை முன்னின்று சொல்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் … Read more

கொரோனாவிற்கான முறையான மருந்து கிடைக்காமல் கூட போகலாம் – WHO எச்சரிக்கை!

கொரோனாவிற்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ்  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தங்களது சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. இந்நிலையில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை … Read more

1.84 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இதுவரையில் உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 6.9 லட்சமாக உள்ளது. அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் பல இடங்களில் அச்சுறுத்தலையும், தற்கொலை எண்ணங்களையும் கொடுத்தாலும் பலருக்கு கொரோனா குறித்த அச்சமின்றி பழகிய ஒன்றாக மாறிவிட்டதால் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுவரை உலகளவில் 18,443,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,672,917 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் … Read more

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள் – ஆதரவற்று தவிக்கும் 12 வயது சிறுவன்!

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அச்சத்தால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளால் ஆதரவற்று நிற்கும் 12 வயது சிறுவன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று தங்களது உயிரை வெவ்வேறு விதங்களில் மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த … Read more

கொரோனா நோயாளிகளுக்காக விருதுநகரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம்!

விருதுநகரில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் உள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகளையோ அல்லது தடுப்பூசிகளையோ இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பல இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர். 154 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. நேற்று ஒரே … Read more

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 217,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும், 4,404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 18,226,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 692,420 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

தலைவர்கள் சிலைக்கு முழு ஊரடங்கு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி!

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாளிலும் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பரவலால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு 31 வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், … Read more

தஞ்சை ஆட்சியர் கொரோனா நோயாளிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தஞ்சை இளைஞருக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராஜ். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நோயாளிகள் பலரும் மன அழுத்தத்திலும் மரண பயத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறா. இளைஞருக்கு இன்று … Read more

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1.77 கோடி, குணமாகியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 1.77 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 1.11 கோடி பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 282,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,234 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,745,673 ஆக உள்ளது. … Read more

சீன ஏற்றுமதியை குறைப்பதற்காக வண்ண தொலைக்காட்சி இறக்குமதிகளுக்கு தடை!

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசாங்கம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், சீனா போன்ற அத்தியாவசிய மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய பொருட்களின் ஏற்றுமதியை குறைப்பதற்காகவும் தான் என கூறப்படுகிறது. மேலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளில் இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் … Read more