பட்ஜெட் விலையில் எல்ஜி ஜி7 (LG G7 & G7+), எல்ஜி ஜி7 பிளஸ் அறிமுகம்.!

தற்சமயம் எல்ஜி ஜி6 ஐவிட எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இடம்பற்றுள்ளது, மேலும் இந்த வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது. விரைவில் வெளிவரும் எல்ஜி ஜி7, எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அதிகம் எதிர்பார்க்கும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.6000 விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவரும்.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.0-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்த் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

புகைப்படங்களை எடுக்க 16எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் அட்காசமான செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

LG G7 (LG G7 & G7 +), LG G7 Plus Introduction at Budget Price!

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment