தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது – அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ

  கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில்

By Dinasuvadu desk | Published: Mar 16, 2018 04:19 PM

  கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர்.ஜனார்த்தனன், நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நகர பொருளாளார் வாசமுத்து, ராமசந்திரன், வண்டானம் கருப்பசாமி, செல்லையா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக தொடர்ந்து நிறைவேற்றி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் 2018-19க்கான நிதிநிலை அறிக்கையினை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகபட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்ஜெட்டாக உள்ளது. கல்வி, விவசாயம் , சுகாதாரம் ஆகியவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, நடு நிலையாளர்களும் பாராட்டும் வரி இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. தொடர்ந்து தமிழர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும், காவிரி பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, மத்தியரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, சட்டமன்றத்தில் ஒரு மைல்கல் என்று சொல்லாம், காவிரி பிரச்சினையில் முதன் முதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 98ல் வாஜ்பாய் அரசில் இருந்த அதிமுக அமைச்சர்களை பதவி விலக செய்து அழுத்தம் தந்தார்.தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசு இதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா, அதே வகையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு, அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இதற்கு மேலாக கடந்த 24ந்தேதி அம்மா இருசக்கர வாகன தொடக்கவிழாவில் கலந்து கொள்வந்த பிரதமர் மோடியிடம் பொது மேடையில் நேரிடையாக வலியுறுத்தினார். தொடர்ந்து மக்களின் நலன்காக்கும் அரசாக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளின் குறிப்பாக சாலைவசதி, குடிநீர் வசதிகளை செய்து தருவதில் விரைந்து செயல்பட்டு வருகிறது.கடம்பூர் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் மூலமாக ரூ1கோடியும், ரூரிப் திட்டத்தின் மூலம் 50 லட்சமும்,கயத்தார் -கடம்பூர் சாலையை பழுது பார்க்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது ரூ.40லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.35லட்சம் ஒதுக்கப்பட்டு பேரூராட்சி பல்வேறு வார்டுகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்தாலும், சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு தந்தனர். காவிரி பிரச்சினையை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை, தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஜெயலலிதா எவ்வளவு உறுதிபாட்டில் இருந்தார்களோ, அதில் கடுகளவு கூட குறையமால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தினை புறக்கணித்து, முடங்கும் வகையில் உறுதியாக உள்ளனர். அம்மா மணிமண்டபம் கட்டுவதற்கான டெண்டர்விடப்பட்டுள்ளதால் விரைவில் பணிகளை முதல்வர் தொடங்கி வைப்பார். தமிழகத்தில் பலர் கட்சி ஆரம்பிக்கின்றனர்.அதே போன்று அவரும் (டி.டி.வி.தினகரன்) தொடங்கியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுகவை அண்ணா ஆரம்பித்தார். அவர் தொடங்கி காரணத்தினால் அந்த கட்சி இன்றும் உள்ளது, அண்ணாவின் மறைவுக்கு பின்பு அதிமுகவை எம்.ஜீ.ஆர் தொடங்கினார். அவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும், அவரது நூற்றாண்டு விழா கொண்டாடடி, 101வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது இயக்கம் தான் ஆட்சியில் உள்ளது. இந்;த 2கட்சியும் தான் என்றைக்கும் நிலையாக உள்ளது. கட்சி ஆரம்பிபது அவர் (தினகரன்) விருப்பம், தனி கட்சி , சின்னம் பெற்ற பிறகு அதிமுக மீட்போம் என்று கூறுவது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கமே..தனி அமைப்பு தொடங்கிய பின்பு அதிமுக தொண்டர்கள் பற்றி கருத்து கூற கூடாது. அவரது தொண்டர்களை அவர் பாhத்துகொள்ளுவார். எம்.எல்.ஏக்களை ராஜினமா செய்ய வேண்டும் என்பது மு.க.ஸ்டாலின் கருத்து 14 ஆண்டுகளாக மத்தியரசில் இருந்தவர்களுக்கு இன்று ஞானதேயம் வந்துள்ளது..சட்டமன்றத்தில் முதல்வர் என்ற கனவில் உள்ளார்.அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
Step2: Place in ads Display sections

unicc