போலி செய்திகளை(Fake News) எதிர்க்க கூகுலின்(Google) அதிரடி முடிவு …!

 

கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “தரமான பத்திரிகைகளை உயர்த்தவும்,நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும்” உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் திட்டத்தை பற்றி பேசுகையில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் போலி செய்திகளின் பங்களிப்பு இன்றும் இருப்பதாக கூகுள் நம்புகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின்போது தான், போலி செய்திகளானது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதையும், அதை நிரந்தரமாக களைய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்தன, அதற்கு கூகிள் செவிகொடுக்க ஆரம்பித்தது. ஒரு வலைப்பதிவு இடுகையில் கூகுள் “உண்மையான மற்றும் போலியான ஆன்லைன் தகவல்களை வேறுபடுத்தி காண்பதென்பது மிகவும் கடினமானதாக உள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

இந்த திட்டமானது மூன்று பிரதான குறிக்கோள்களை மையமாகக் கொண்டிருப்பதாக கூகுள் கூறுகிறது. ஒன்று தரமான பத்திரிகைகளை உயர்த்த மற்றும் வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, நிலையான வளர்ச்சியை அடைய வணிக மாதிரிகள் உருவாக்குவது மற்றும் இறுதியாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வழியாக செய்தி நிறுவனங்களுக்கான அதிகாரங்களை அளித்தல் ஆகியவைகளாகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment