#TNPL2021: ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது டிஎன்பிஎல் தொடர்.. போட்டி அட்டவணை, ஏலம் தேதி, உள்ளிட்ட விபரம்!

ஐந்தாவது சீசனுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் டிஎன்பிஎல் பெரிய தொடராக கொண்டாடப்படுகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், ஐபிஎல் தொடருக்கும், இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள். இதனால் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த தொடர், மிக பெரிய வாய்ப்பாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தமிழக வீரர்கள், தொடர் … Read more

#IPL2021: 5-6 ஆண்டுகளுக்கு முன் கோலியை பாத்து தோனி கூறிய அந்த வார்த்தை.. பிட்டர்சன் ஓபன் டாக்!

கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் … Read more

#IPL2021: திடீரென வைரலாகும் வார்னரின் ஷூ.. அப்படி அதுல என்ன இருக்கு?

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் … Read more

2-ம் இடத்தில் டெல்லி.. மீண்டும் ஆரஞ்சு கேப் வாங்கிய தவான்; பர்பிள் கேப்பை வைத்திருப்பது இவர்தான்!

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப்பை வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம். இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 16.3 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், இந்த போட்டியில் தவான் 46 ரன்கள் … Read more

#ExitPolls: புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!

புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 இடங்களில் வெற்றிபெற்று, ரங்கசாமி ஆட்சியை பிடிப்பார் என்று ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள், வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 … Read more

#Breaking: மேற்குவங்கத்தில் தொடருமா மம்தா ஆட்சி? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8-ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்பு  முடிவுகள் வெளியானது. அதன்படி, … Read more

#MIvRR: டி-காக் அதிரடி அரைசதம்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று முடிந்த 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more

#DCvKKR: முதலிடத்திற்கு செல்லுமா டெல்லி? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்து காணலாம். ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறவுள்ள 25-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி … Read more

#MIvRR: தொடர் தோல்வியில் இருந்து தப்புமா மும்பை?? 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் … Read more

#IPL2021: “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் வீட்டிலே இருக்கின்றனர்; இல்லையென்றால்..”- பிசிசிஐ!

ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர். அந்தவகையில், கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து … Read more