தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், 75 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை … Read more

ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்..!

ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.’ … Read more

தென் தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு வங்கி தொடக்கம்..!

தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்.  வாகன விபத்துகளால் கை கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு புற்றுநோய் மற்றும் பல விதங்களில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்பால், பலருக்கும் எலும்புகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு. அதாவது, எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு, புதிய எலும்பை பொருத்த வேண்டும். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. கடந்த 2017 … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரவையை வைத்து அசத்தலான பலகாரம் ரெடி..!

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே ரவாலட்டு என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் நமது வீடுகளில் பண்டிகை நாட்கள் என்றாலே பலகாரம் இல்லாத பண்டிகை இராது. அதன்படி இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை : வறுத்த ரவை – ஒரு கப் சர்க்கரை – … Read more

பழுதடைந்த 92 பள்ளி கட்டடங்களை இடிக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு..!

நெல்லை மாவட்டத்தில் பழுதடைந்த 92 பள்ளிக்கூடங்களை இடிக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க … Read more

‘எனது மனதிற்கு நெருக்கமான விழா’ – கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இது எனது மனதிற்கு நெருக்கமான விழா, அனைத்து மதங்களும் அன்பையே பொத்திகின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது. … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 7,172 பேர் சிகிச்சை பெற்று … Read more

யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது..!

யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரத்தில், கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது  செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் … Read more

வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்ற ராஜேந்திர பாலாஜி – விருதுநகர் எஸ்.பி

வசரஅவசரமாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு, வெவ்வேறு கார்களில் மாறி, மாறி சென்றதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. இந்த இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க கோரி ராஜேந்திர … Read more

பொங்கல் பண்டிகையையொட்டி 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..! – அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி … Read more