#கொரோனா-சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பு கடந்த 11ம் தேதி  உறுதி செய்யப்பட்டது.இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி என்பது … Read more

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம்….

தமிழகத்தில், மீண்டும் அ.தி.மு.க.,  ஆட்சி அமைக்க வேண்டி, திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழக  இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு என்பவர், நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் திருவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த … Read more

உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா… தமிழக அரசு சார்பில் கோரிக்கை…

தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல்  கர்நாடகா ஏமாற்றியுள்ளது’ என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நேற்று கூடியது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட  நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, … Read more

புதிய கல்வி கொள்கை தொடர்பாக இன்று கருத்து கேட்பு… இணையம் மூலம் தெரிவிக்கலாம்

நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு  இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும்  புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் … Read more

ஏமாற்றத்துடன் விலைகள்-இன்றைய நிலவரம் இதோ

தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,24), பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய். 84.14 , டீசல் லிட்டருக்கு ரூபாய் 76.72 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், … Read more

கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்….

கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்னமும் தனிந்த பாடில்லை. பலரை நிலைகுலைய செய்யும் இந்த பெருந்தொற்று பலரை காவுவாங்கி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில  மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும்,  3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார் திருமதி. சாகியா இனாம். இவர் ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி…

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. அவ்வகையில், வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கக்கூடிய  அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.  ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக … Read more

ஹிந்தி தெரியாதா?… நோ லோன்… ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்…

கடன் வாங்க வந்த மருத்துவருக்கு  ஹிந்தி தெரியாததால், கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம்  யுத்தப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 77. இவர்  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், தலைமை டாக்டராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர், 15 ஆண்டுகளாக, தான் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு, சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். வங்கியின் மூத்த மேலாளராக இருந்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால், ‘உங்களுக்கு … Read more

#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்

நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள்மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து தோனி கூறியதாவது:நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு … Read more

கொரோனா வார்டில் மின் தடை… மூச்சுத்தினறலால் 2 பேர் பலி…

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் … Read more