#Alert : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், 11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான … Read more

உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா… தமிழக அரசு சார்பில் கோரிக்கை…

தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல்  கர்நாடகா ஏமாற்றியுள்ளது’ என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நேற்று கூடியது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட  நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, … Read more

கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்! தமிழகத்தை வந்தடைந்தது!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து இடங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ள நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.