விருதுநகர் நீதிமன்றம் மதுரை சிறையிலேயே வைத்து நிர்மலா தேவியின் குரல் மாதிரி பதிவு செய்ய உத்தரவு!

விருதுநகர் நீதிமன்றம் ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர் நிர்மலா தேவியின் குரல் மாதிரியை மதுரை மத்திய சிறையில் வைத்தே பதிவு செய்ய  அனுமதி வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், தற்போது நிர்மலா தேவி சிறையில் உள்ளார். செல்போன் மூலம் மாணவிகளிடம் பேசியது நிர்மலா தேவிதான் என்பதை உறுதிப்படுத்த குரல் மாதிரியை பதிவு செய்து ஆய்வு செய்ய செய்வதற்காக அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார், மனுத்தாக்கல் செய்தனர்.

மனு விசாரணைக்கு வந்த போது, நிர்மலா தேவியை சென்னை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த அவர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை திசை திருப்பும் முயற்சி என வாதிட்டார். இதைக் கேட்ட நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி, பேராசிரியை நிர்மலா தேவியை சென்னை அழைத்துச் செல்ல அனுமதி தர மறுத்தார். மதுரை சிறையிலேயே வைத்து குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதி வழங்கியதுடன், அவரது நீதிமன்றக் காவலை 21ம் தேதி வரை நீட்டித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment