உ .பி யில் வெற்றி பெற்றவர்களுக்கு விருந்தளித்த முதல்வர் யோகி!

உத்திரபிரேதசம் மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மதியம் சிறப்பு விருந்து அளித்தார். இதில்,அம்மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் அமெதி தொகுதியில் ராகுல்காந்தியை வென்ற ஸ்மிதி ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பேசிய யோகி தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்காக சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ராமர் கோயில் கட்டுவது உறுதி…உ.பி முதல்வர் நம்பிக்கை…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத் ராமர் பிறந்ததாக கூறப்படும் குறிப்பிட்ட இடத்திலேயே கோவில் கட்டப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில் , கும்பமேளாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான  பக்தர்கள் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பூஜை செய்து விட்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ராமர் … Read more

பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள்…..உ.பி முதல்வர் யோகி அதிரடி உத்தரவு…!!

பசுக்களை பாதுகாக்க பசு காப்பகங்கள் அமைக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பசு பாதுகாப்பு குறித்து சில யோசனைகளும் , புதிய உத்தரவுகளும்  மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் பிறப்பிக்கப்பட்டது. அதில் எல்லா தெருக்களிலும் ஆதரவின்றி அனாதையாக சுற்றித்திரியும், கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்க வேண்டி புதிதாக ஒரு பசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரசு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். பசு பாதுகாப்புக்குழு பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் … Read more

போலீசுக்கு தர்ம அடி… வெளுத்து வாங்கிய கவுன்சிலர்… வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு உணவுவிடுதியில் பெண் வழக்கறிஞ்சருடன் வந்த ஒரு போலீஸ் அதிகாரியை காட்டு மிராண்டித்தனமாக பாரதீய ஜனதா கட்சியின் கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறுகையில்  மீரட் விவகாரத்தில் ஏற்கனவே  பிஜேபி கவுன்சிலர் முனிஷ் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. DINASUVADU  #WATCH: BJP Councillor Manish thrashes a Sub-Inspector … Read more

காதல் ஜோடிகளை பிரித்த ஆன்டி ரோமியோ…!!

காதல் ஜோடியை பிரித்த ஆன்டி-ரோமியோ படை, பெண்ணை ராக்கி கட்ட வைத்தது. பையன் பெண்ணின் கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கான்பூர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ்-டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் பெண்களுக்கு தொல்லை தருவோரை கைது … Read more

முழு இந்துத்துவ மாநிலமாக மாறும் உத்திர பிரதேசம் : இந்து மாணவர்களுக்கு கிருஸ்துமஸ் தடை

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்ததின் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசு கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. இவ்வாறு இந்துத்துவ கொள்கைகளை பலமாக பரப்பி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் அலிகாரில் கிருஸ்துவ பள்ளிகள் அதிகமாக உள்ளது. விரைவில் கிருஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதால், பள்ளிகளில் கிர்ச்துமஸ் விழாக்கள் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அந்த விழாக்களில் இந்து மாணவர்களை அனுமதிக்க கூடாது என இந்துத்துவ அமைப்புகள் … Read more

பள்ளிகளையும் காவிகளாக மாற்றும் உ.பி பாஜக அரசு

உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவி வகித்த பின்பு அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் காவி வண்ணத்திலேயே காட்சியளிக்கின்றன. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று, தற்போது அரசு பள்ளிகளுக்கும் காவி வண்ணம் பூசி மேலும் இந்து மதவாத சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளது பாஜக அரசு. இந்த காவி வண்ணம் பூசப்பட்ட பள்ளிகள், உத்திரபிரதேச மாநிலத்தில்   பிலிபட் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் நடத்திய … Read more

உத்திரபிரதேசத்தில் தொடங்கியது தேர்தல் : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. இதன் முதற்கட்ட வாக்கு பதிவானது இன்று தொடங்கப்பட்டது.  இத்தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் இன்று காலையிலேயே வாக்களித்தார். இத்தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடைபெருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.