ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும் – வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி !

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ சார்பில் ஆட்கொணர்வு … Read more

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு ! வைகோ அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்  விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச் … Read more

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்- ஸ்டாலின்

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழாவை  திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசுகையில், திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம். தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது.ரயில்வே, தபால் … Read more

மோடியின் கண் அசைவிற்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள்-வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் ஒரு அரசு செயல்படவில்லை .தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். மோடியின் கண் அசைவிற்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். இந்தி மொழி மட்டும் பேசப்படும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், அதில் தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் இருக்காது. அமித் ஷாவிற்கு அரிச்சுவடிக்கூட தெரியாது. இந்தி மொழி திணிப்பு குறித்து பேச அமித் ஷாவிற்கு அருகதை கிடையாது .திராவிட இயக்க வரலாறு தெரியாத ஒருவர் … Read more

#Breaking: திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை

திமுக தொடர்ந்த  அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.வைகோ தற்போது  மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இதனைத்தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி விசாரணைக்கு  உடல் நலக் குறைவால் … Read more

இன்று வைகோ மீதான அவதூறு வழக்கில் தீர்ப்பு

வைகோ 75 வயதிலும் அரசியல் நிகழ்ச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருவதால் அவரது உடல்நிலை  பாதிக்கப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன் ரத்த அழுத்தம் பிரச்சனை காரணமாக மதுரையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் மதிமுக பொது செயலாளர் வைகோ  பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் .இதனையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில்  சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பினார். இந்த நிலையில்  2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ … Read more

வைகோ மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வைகோ தற்போது  மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான … Read more

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் –  மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,  2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, ரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை … Read more

வைகோ மீதான அவதூறு வழக்கு !ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு

வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வைகோ வழக்கு தொடர்பாக … Read more