15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..!

Tamil Nadu Govt

போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர். பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் கடந்த மாதம் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் … Read more

அரசு பஸ் ஸ்டிரைக் தொடரும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ … Read more

பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை. நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பணிஓய்வு, வாரஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து என்றும் அறிவித்துள்ளது. போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் மாற்று … Read more

திமுக பேரணி எதிரொலி-போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் சென்னை  மாநகர … Read more