பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.!

பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரையில் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Read more

கிராம சபை கூட்டம்: தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விரசனைக்கு வந்தபோது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்காவிட்டாலும்  விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று … Read more

#BREAKING: பிப்.13ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 110-ன் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 15வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கும் என்று … Read more

அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி சென்ற வாரத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தும் … Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்.!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” – துணை முதல்வர் ஓபிஎஸ்

கொத்தடிமை முறை ஒழிப்பு நாளையொட்டி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இன்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். மேலும் … Read more

குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

அரசு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை அரசரடியை சேர்ந்த அன்புநிதி என்பவர் மதுரை உயரநீதிமன்றம் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு குடிமரமாத்து திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு, ஏறி, குளங்களை ஆழப்படுத்துவது, கரையை மேம்படுத்துவது போன்றவைகளை மேற்கொள்ளவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 முதல் 2020 வரை இந்த திட்டத்திற்கு ரூ.928.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த … Read more

துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்., உதவி செய்ய தமிழக அரசு தயார் – முதல்வர் அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனது முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்ததால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில … Read more

பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் … Read more

தமிழகத்தில் ட்ரீம் 11 செயலிக்கு தடை – தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ட்ரீம் 11 செயலுக்கு தடை. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் … Read more