#BREAKING: திருச்சி எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா..!

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரனோ பரிசோதனை மேற்கொண்டதில்  எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும்  என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

“இந்திய தேசத்திற்கு பேரிழப்பு” பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ட்வீட்.!

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இரங்கல். கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

இ-பாஸ் கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்..சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.!

இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் எனஎம்.பி காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. திருமணம், இறப்பு மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக … Read more

நடிகர் ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் எம்.பி சந்திப்பு!

நடிகர்  ரஜினிகாந்த் உடன் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத்தொடர்ந்து பலரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்  ரஜினிகாந்தை காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார் .ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது- திருநாவுக்கரசர்

மத்திய அரசை கண்டிப்பதாக ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்த்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும் – திருநாவுக்கரசர்

திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் என்று தகவல் வெளியானது.  இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும் என்று காங்கிரஸ்  எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் என்ற செய்தி வந்தது. … Read more

நவம்பரில்  நடைபெறுமா உள்ளாட்சி தேர்தல்? திருநாவுக்கரசர்

நவம்பரில் உள்ளாட்சி தேர்தல்  நடைபெறுமா என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.  திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.  திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், நீட் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது. உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுமா என நாம் மட்டுமல்ல, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்- திருநாவுக்கரசர்

சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில்  பெரும் விவாத பொருளாக மாறியது .சூர்யாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்,வரவேற்கிறேன்.கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் … Read more

தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது- திருநாவுக்கரசர்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.தேர்தலில் … Read more