கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும் – திருநாவுக்கரசர்

  • திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் என்று தகவல் வெளியானது. 
  • இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும் என்று காங்கிரஸ்  எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் என்ற செய்தி வந்தது.

இதற்கு இடையில் காங்கிரஸ்  எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சிறு சிறு தவறுக்காக கூட்டணி உடைந்ததாக அர்த்தம் இல்லை. இது உடைய போவது இல்லை. எனவே இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும். அதுமட்டுமின்றி பேசிய கருத்துக்களை மறந்து ஒற்றுமையாக இருந்து கூட்டணியை இருக்கட்சியும் தொடர வேண்டும்.

கூட்டணி இல்லை என யாரும் அறிவிக்கவில்லை. கருத்து வெறுபாடுகளால் கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை என்றார். ஏன் பிஜேபி, அதிமுக இடையில் கூட கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளது.

எல்லா பத்திரிக்கை படிக்கலாம்.அவர் அவர் கட்சி பத்திரிகையை அந்த கட்சியினர் தாங்கி பிடிப்பார்கள்.துக்ளக் விழாவில் கலந்து கொண்டதன் காரணமாக அவர் துக்ளக்கை புகழ்ந்து கூறி இருக்கலாம். முரசொலி விழாவில் கலந்து கொண்டால் முரசொலியை புகழ்ந்து பேசி இருப்பர்.நமது அம்மா” படித்தால் இருக்கிற மூளையும் இல்லாமல் போய்விடும் என்று தான் கூட சொல்லலாம், என்றாலும் எல்லா பத்திரிகைகளையும் படிப்பது நல்லது  என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.