அதிமுக_வை வளர்க்கும் உரிமை எனக்கு உண்டு…..தம்பிதுரை பேட்டி…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி , தேர்தல் பிரசாரம் என தேசியளவில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விதித்தது.குறிப்பாக அதிமுக_வும் பாஜகவும் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை பாஜக நான் விமர்சனம் செய்வதாக என்னை பற்றி தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்க்க எனக்கு உரிமை இருக்கிறது அந்த அடிப்படையில்தான் நான் பாரதீய ஜனதா கட்சியை பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

10 % இட ஒதுக்கீடு மசோதா….அதிமுக M.P தம்பிதுரை வெளிநடப்பு…!!

இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார  ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.இதில் மசோதா_மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்பதால் இதில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை எதிர்ப்பு செய்து வெளிநடப்பு செய்தார்.அப்போது இது குறித்து பேசிய மக்களவை … Read more

அதிமுக MP, MLA-க்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் போராட்டம்..!!

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையை ஊர் உள்ளே செல்லவிடாமல் மக்கள் முற்றுகையை செய்தனர். கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூர் அடுத்த வீரணம்பாளையம் என்ற இடத்தில் துவக்க பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அதன் அருகில் உள்ள வாரிவாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார். தடுப்பணையை கவர்னர் திறந்து வைத்தபோது, அதன் அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து துவக்க பள்ளிக்கு மின் சப்ளை செய்யப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு இருந்தது. கவர்னர் … Read more

‘எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்’ விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தையும் ஏற்க மாட்டோம். தம்பிதுரை பேட்டி…!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை உறுதியளித்துள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது எனக் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம் எனக் கூறிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிட … Read more

பிஜேபிக்கு எதிராக வெகுண்டெழுந்த அதிமுக MP..!!

மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் ஹிந்தியிலேயே திணித்து வருகிறது என மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார். அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களை பெறுவதில்  மொழி மிக அவசியமானதாக இருப்பதாக துணை குடியரசுத்தலைவர் சொல்கிறார். ஆனால் மத்தியஅரசு அனைத்து திட்டங்களையும் ஹிந்தியிலேயே திணித்து வருகிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார். அதனையேதான் தொடர்ந்து நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.  மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மொழியையும் இயக்கத்தையும் … Read more