அதிமுக MP, MLA-க்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் போராட்டம்..!!

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையை ஊர் உள்ளே செல்லவிடாமல் மக்கள் முற்றுகையை செய்தனர்.
கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூர் அடுத்த வீரணம்பாளையம் என்ற இடத்தில் துவக்க பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அதன் அருகில் உள்ள வாரிவாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார். தடுப்பணையை கவர்னர் திறந்து வைத்தபோது, அதன் அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து துவக்க பள்ளிக்கு மின் சப்ளை செய்யப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு இருந்தது.
கவர்னர் வருகையை முன்னிட்டு செய்யப்பட்ட இந்த திடீர் ஏற்பாடுகள் 4 நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு மின் சப்ளை மற்றும் குடிநீர் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் வாரிவாய்க்கால் தடுப்பனையின் இருகரைகளும் உயர்த்தி கட்டாமல் அரைகுறையாக கட்டப்பட்டதால் சமீபத்தில் பெய்த மழையால் கரைகள் கரைந்தன. இடிந்து விட்டன. இதனால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் அத்தொகுதி எம்எல்ஏ கீதா ஆகியோர் அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்க வந்தனர். இதையறிந்த அப்பகுதிமக்கள் ஊர் எல்லையில் மக்களவை துணைத்தவைர் தம்பிதுரை மற்றும் எம்எல்ஏ கீதாவை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு, பள்ளிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், சாிவர கட்டப்படாத தடுப்பணையின் கரைகளை உயர்த்தி கட்ட வேண்டும் எனக் கோாி வாக்குவாதம் செய்தனர். தம்பிதுரை உடனே, இதுகுறித்து முறையாக கோரிக்கை மனு எழுதி தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து உடனே துவக்கப்பள்ளிக்கு மின் இணைப்பு தரவேண்டும் என உத்தரவிட்டார். மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் எம்எல்ஏவை அப்பகுதியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment