காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கங்கூ அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவில்லை.

அனந்த்நாக்கில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், துப்பாக்கிச் சண்டையாக மாறியது. இந்த சம்பவத்தின் போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் கூறினார். என்கவுன்டர் செய்ய இடத்திலிருந்து ஏ.கே. துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். #AnantnagEncounterUpdate: 01 unidentified #terrorist killed. Search going on. Further details … Read more

காஷ்மீரை சேர்ந்தவள் என்பதால் பயங்கரவாதி என அழைப்பதாக பெண் குற்றசாட்டு!

காஷ்மீரை சேர்ந்தவள் என்பதால் பயங்கரவாதி என அழைப்பதாக பெண் குற்றசாட்டு கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பெண் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை பயங்கரவாதி என அழைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு ஆணுடன் வீட்டுக்குள் நுழைந்த வீடு உரிமையாளர் பெண், தன்னை பயங்கரவாதி என அழைத்ததால் தான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் நேற்று வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில்  பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை. ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும், என்கவுன்டர் நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். இந்த என்கவுன்டர் சம்பவத்தில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு  உள்ளனர். பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. என்று காஷ்மீர்  காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்நேற்று முன்தினம் புட்காமின் பகுதியில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் … Read more

#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தீவிரவாதிகளின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக முடக்கியுள்ளது  தெற்கு காஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினான சி.ஆர்.பி.எப்  முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இர்சத் அகமது ரேசி என்கிற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டார். இந்த பயங்கரவாதியின் தந்தைக்கு சொந்தமாக புலவாமா மாவட்டம் கல்கபோராவில் உள்ள ரத்னிபோரா பகுதியில்  வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தது … Read more

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுகொலை.! இராணுவ அதிகாரி, போலீசார் காயம்.!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள யெடிபோராவில் ஒரு சில பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி படைகளுக்கு  தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து  தேடுதல் வேட்டையில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக ஜம்மு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PattanEncounterUpdate: 01 unidentified #terrorist got killed. #Operation going on. Further … Read more

புல்வாமா தாக்குதல்.! பாகிஸ்தான் வங்கியில் இருந்து 10 லட்சம் பரிமாற்றம்.! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக்கிற்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாயானது பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. – NIA குற்றப்பத்திரிக்கை. புல்வாமா பயங்கர தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு துறையான NIA செவ்வாய்க்கிழமையன்று 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் புல்வாமா எனும் … Read more

ஜம்முவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை.. மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.!

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் நடந்த மோதலில் மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நேற்று முதல் பரமுல்லா மாவட்டத்தில் மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனால், மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடன் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையை  மீட்கப்பட்டன.  மேலும், தேடுதல்  … Read more

புல்வாமாவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. புல்வாமாவின் கம்ராசிபோரா கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் அதிகாலை ஈடுப்பட்டனர். அப்போது, அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயமடைந்ததை அடுத்து காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், பின்னர் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க 44 மூத்த அதிகாரிகள் அடங்கிய புதிய குழு.!

பயங்கரவாதிகள் இந்தியா வருவதை தடுக்கவும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் 44 மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் மூத்த அரசு அதிகாரிகள் 44 பேர் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.  UAPA இன் 1967 சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு 51A-யின் படி, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, தனிநபர் அல்லது ஒரு குழுவானது பயங்கரவாத நடவடிக்கைகளில்  … Read more