மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் மரியாதை…!

நடிகர் விஜய் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.  கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் அவர்கள், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதில் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெரு அதிர்ச்சியில் உள்ளனர். புனித் ராஜ்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ராகுல்(21) என்ற … Read more

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் – கர்நாடகா முதல்வர்

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் அறிவிப்பு. கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் இன்று காலை தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்து வந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்பின், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் … Read more

நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்: “விதியின் ஒரு கொடூரமான திருப்பம்” – பிரதமர் மோடி இரங்கல்..!

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு,ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில்,சிகிச்சை பலனின்றி காலமானார். புனீத்  ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான … Read more

#BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.  … Read more