புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி  இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ,திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டிய விவரங்கள் இதோ.  புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான  4 வழி தேசிய நெடுஞ்சாலை … Read more

ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட பாஜக..ஸ்டாலின்.!

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை … Read more

Big Breaking : நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார்  முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார்  முதலமைச்சர் நாராயணசாமி .காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதென்றும்.முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் .கடந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம் .புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த நான்கு  ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பேசி வருகிறார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணை சபாநாயகர் இல்லத்தில் ஆலோசனை…!

இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள், துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்,  புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை … Read more

புதுச்சேரி கனமழை: ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண் மாயம்- தேடும் பணி தீவிரம்!

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தொடர்ந்து 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வாய்க்காலின் அருகே உள்ள வீட்டில் ஹசீனா பேகம் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார். தற்பொழுது புதுச்சேரியில் பலத்த மழை … Read more

#BREAKING: புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா..!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடித‌த்தை கொடுத்துள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து, 5 மற்றும் 6 ஆம் தேதியும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது – முதல்வர் எச்சரிக்கை.!

மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்று எழுந்தியிருந்தார். … Read more

இன்று முதல் கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி.!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லூரிகள் இன்று திறப்பதால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பது … Read more

புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர்..!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே நேற்று இரவு 11 .30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்தது. தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தொடர்ந்து நிவர் புயல் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில், கரையைக் … Read more