ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 1ம் தேதி … Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான புதிய தேர்வு தேதிகள் மத்திய மனிதவள அமைச்சர் அறிவித்தார்.  இதனிடையே இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு … Read more

வேறு வழியில்லை ! 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து முதலமைச்சர் விளக்கம்

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார், 

10, +1, +2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவு பெறுகிறது,மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும்,  பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4-ஆம் தேதி தொடங்கி மார்ச்.26-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.மே.14-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2-ஆம் தேதி தொடங்கி மார்ச்.24-ஆம் தேதி  நிறைவு பெறுகிறது.ஏப்ரல் 24-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 … Read more

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -தமிழக அரசு அரசாணை வெளியீடு

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று செப்டம்பர்  13-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.இதன் பின்பு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் … Read more

#BREAKING : 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து-பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில்  5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை … Read more

தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்! 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் – மநீம அறிக்கை

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  மத்திய அரசு பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என்று அறிவித்தது.இதனால்  5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.அரசியல் கட்சியினர்,கல்வி ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையே  5, 8ஆம் வகுப்புகளுக்கு  … Read more

#Breaking : 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- அட்டவணை வெளியீடு

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்த தேர்வுகள் நடப்பு ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.அதன்படி , 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. … Read more

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ! தேர்வு நேரம் நீட்டிப்பு

 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி அளித்த நிலையில் பின்னர் அது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.ஆனால் தற்போது இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ள நிலையில் தேர்வு நேரத்தை  நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில்  10, … Read more

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது  அரசுத் தேர்வு இயக்ககம் .அதில், 12ம் வகுப்பு தேர்வு  மார்ச் 2-ஆம் தேதி தேர்வு தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும்  12ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஏப்ரல் 24 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிகிறது. மே 14-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் .அதே போல் 10-ஆம் வகுப்பு … Read more