#Breaking : 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- அட்டவணை வெளியீடு

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்த தேர்வுகள் நடப்பு ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.அதன்படி , 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.
5- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : 
ஏப்ரல் 15  ஆம் தேதி – தமிழ்
ஏப்ரல் 17 ஆம் தேதி  – ஆங்கிலம்
ஏப்ரல் 20 ஆம் தேதி  – கணிதம்

 
8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 30 ஆம் தேதி – தமிழ்
ஏப்ரல் 2 ஆம் தேதி  – ஆங்கிலம்
ஏப்ரல் 8 ஆம் தேதி  – கணிதம்
ஏப்ரல் 15 ஆம் தேதி – அறிவியல்
ஏப்ரல் 17 ஆம் தேதி – சமூக அறிவியல்.