பொங்கல் பரிசு தொகுப்பு:அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகையாக ரூ.1000 …!முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்….!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி  வைத்தார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், வரும் 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது.  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, … Read more

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .1000 வழங்கப்படும்..!ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .1000 வழங்கப்படும் என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர்: ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் … Read more

ஜனவரி 11ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 24,708 பொங்கல் சிறப்பு பேருந்துகள்…!!

பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் … Read more

பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்…!!

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மண்ணாலான பொங்கல் பானைகள், அடுப்பு தயாரிக்கும் பணி மதுரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்… தை திருநாளை முன்னிட்டு மண்பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிபட்டி … Read more

நெரிசலின்றி பொங்கல் பரிசு வழங்க ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுரை- கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை 

  ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஞானசேகரன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பான அவர் சுற்றறிக்கையில் ‘ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் தகுதியுள்ள, ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் … Read more