பிரேத பரிசோதனைக்கு பின்னும் உடலை வாங்க வரவில்லை என்றால் மின்தகன மயானத்தில் எரிக்க திட்டம்.!

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் குற்றச் சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் கழிந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் … Read more

எனது மகளுக்கு மட்டும் அல்ல ; நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது – நிர்பயாவின் தாய் பேட்டி.!

நிர்பயா வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை சற்று முன் நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் செய்தியாளார்களிடம் பேசிய நிர்பயா தாய் ,எனது மகளுக்கு மட்டும் அல்ல , நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.எனது நாடு நீதியை பெற்றுத்தந்துள்ளது.மேலும் ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது. இந்திய நீதித்துறைக்கும், அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி .நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது என நிர்பயா … Read more

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் நிர்பயா குற்றவாளி. இதனிடையே கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, … Read more

#Breaking: நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவது … Read more

நிர்பயா வழக்கில் தள்ளிப்போன தூக்குத்தண்டனை ..!7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் … Read more

#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.  குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் … Read more

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது ? டிசம்பர் 18 ஆம் தேதி தீர்ப்பு

நிர்பயா வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.   நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட கோரிய மனு  டிசம்பர் 18-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.   கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் … Read more

நிர்பயா வழக்கு : குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 17 -ல் விசாரணை

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  அக்ஷ்குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது  டிசம்பர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.  கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 … Read more