#Breaking: நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவது உறுதியானது.  இதனிடையே திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்