நீலகிரியில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – ஆட்சியர் அதிரடி உத்தரவு.!

நீலகிரி மாவட்டம் உதகையில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை. கொரோனா அச்சம் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். இந்நிலையில் எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி … Read more

நீலகிரியில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பினர் -மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.கடந்த `10 நாட்களாக தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் நீலகிரியில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில் ,இங்கு … Read more

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக 10 மரங்கள் நடப்படும்- முதலமைச்சர் பதில்..

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது . முதல் நாள் கூட்டம் தொடங்கிய போது  மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் எம்,எல்,ஏ கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் , நீலகிரியில்  மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வன விலங்குகள் உள்ளதால்  இடத்தை மாற்ற வேண்டும் … Read more

நீண்ட தூரம் விரட்டிய யானை.. தும்பிக்கையால் தூக்கி வீசி இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம்!

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது. இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை … Read more

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னது சர்ச்சையாக மாறியுள்ளது.  நீலகிரி மாவட்டம் முதுமையில் யானைகள் முகாம் நடைபெறுகிறது.இதற்கான நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்பொழுது, அமைச்சர் சீனிவாசன் அங்கு சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. The inauguration of the rejuvenation camp for captive elephants in the Mudumalai Tiger Reservce (MTR) were overshadowed as State forest minister, Dindigul C. Sreenivasan, … Read more

கனமழை எதிரொலி ! நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில்  பருவமழை தீவிரமடைந்து வருகிறது.இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கனமழை எதிரொலி : நீலகிரியில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.எனவே நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.    

தொடர் மழை ! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . ஆனால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்று … Read more

நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில்  கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.கனமழையால்  பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து … Read more

நீலகிரி வெள்ள பாதிப்பு: இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

நீலகிரி வெள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்கிறார். நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த  கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் அங்குள்ள பல பகுதியில்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் … Read more