வரலாறு காணாத மழையால் தவிக்கும் கோவை மற்றும் நீலகிரி மக்கள்! அரசு உதவ வலியுறுத்தல் : விஜயகாந்த்

கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் வெளியில் வர இயலாமல்  தவிக்கின்றனர்.  இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், கோவை, நீலகிரியில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. தமிழக அரசு பொற்கால அடிப்படையில், மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், முக்கியமாக நீலகிரி மக்களின் … Read more

நீலகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் கடந்த 5 நாட்களாலாகி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணையின் முழுகொள்ளளவான 100 அடியில் இருந்து, 95 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. இதனையடுத்து பில்லூர் அணையை சுற்றியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர்  குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி-முதலமைச்சர் அறிவிப்பு

நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர்  குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. நீலகிரியில் கனமழை காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மழை தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ,நீலகிரி … Read more

கோவை, நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவையில் கனமழை பெய்து வருவதால், சாலைகள், தெருக்களில் வெல்ல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோவை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த 4 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று 5-வது நாளாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.