மனு அளிக்க வந்தவர்களை அவமதிப்பதா? அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது – சீமான்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என சீமான் அறிக்கை. மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத் தம்பி இரணியன், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்கச்சென்றபோது … Read more

சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான்

சவுக்கு சங்கரின் 6 மாத சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை. தனி நபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல, தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதிமன்றங்கள், … Read more

டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? – சீமான் கேள்வி

தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாட்டு. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள … Read more

குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள் – சீமான்

குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என சீமான் கேள்வி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற … Read more

பச்சைத் துரோகம் செய்யும் திமுக அரசு.. இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான்

தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை … Read more

பவர் கட்.. வாட்டர் கட்.. ஆனால் Money கட் மட்டும் இல்லை – சீமான் விமர்சனம்

உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் என சீமான் பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திமுக, அதிமுகத்தான் ஆண்டுள்ளது. தமிழக்தில் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை, வாங்குவதில் தான் முதலீடு செய்யப்படுகிறது. … Read more

அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் திமுக – சீமான் காட்டம்

ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் … Read more

இது நாகலாந்து அல்ல, ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – சீமான் பதிலடி

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன என சீமான் பதிலடி. சென்னை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என குற்றசாட்டினார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு … Read more

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! – சீமான்

எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தல். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பான விகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும் குடியரசு தலைவர் முடிவுக்காக காத்திருக்க … Read more

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – சீமான்

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன. அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் … Read more