தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன்! வீடியோ உள்ளே!

  • தனது தந்தையை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த முகன்.
  • இணையத்தை வெளியான வீடியோ. 

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் முகனின் தந்தை பிரகாஷ் ராவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவரது இழப்பு முகனின் குடும்பத்தை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் முகன் தந்தையின் மறைவு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து முகன் தந்தையின் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. முகன் கண்ணீருடன் தனது தந்தையை வழியனுப்பி வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

https://youtu.be/-xp9lROHVDU

உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது! முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன் !

  • உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது.
  • முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன்.

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், இவரது தந்தை, நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். முகன் தந்தையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இயக்குனர் சேரன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசு தான் பாடும் திறன். அனைத்தும் அறிவேன் தம்பி. உன் பிக்பாஸ் வெற்றி கூட உன் தந்தையின் சந்தோஷத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்பொது உணர்கிறேன்.’ என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

முகனுக்கு முத்தமிட்ட ஷெரினின் தாயார்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும் பல இடங்களை சுற்றி அருள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும், மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், முகன், ஷெரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முகனுக்கு, ஷெரினின் தாயார் முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

தளபதியின் இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும் : பிக்பாஸ் வின்னர் முகன்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியிருந்தார். அதுபோல சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், தற்போது நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் வின்னரான முகனிடம், ஒரு பேட்டியின் போது, தளபதி விஜய் பேசியதில் உங்களை மிகவும் கவர்ந்த வசனம் எது என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த முகன், ‘கிரீடம் எவ்வளவு கனமாக வேணா இருக்கலாம். ஆனா, அதை தங்குற தலை கணமா இருக்க கூடாது.’ என்ற வார்த்தை அவருக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

குழந்தையின் மனதை கொள்ளையடித்த முகன்! இந்த குழந்தை எப்படி பேசுதுன்னு பாருங்க!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வின்னராக முகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகனை பொறுத்தவரையில் எந்த விஷயத்திலும் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.
முகன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவர் கூறிய அன்பு ஒன்று தான் அனாதை என்று கூறிய வார்த்தை பலரது மனதையும் தொட்டுள்ளது. இந்த வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது.
இந்நிலையில், ஒரு குழந்தை முகன் பாடிய நீதானே நீதானே பாடலை பாடி, முகன் குறித்து பெருமையாக பேசியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

நீ ஜெயிக்க பொறந்தவண்டா! உன் அன்பு அநாதை இல்லை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் .கலந்து கொண்டனர். அதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இறுதியில் பிக்பாஸ் டைட்டிலையும் அவரே பெற்றுள்ளார்.
இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், முகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ ஜெயிக்க பொறந்தவண்டா, உன் அன்பு ஒன்றும் அநாதை இல்லை.’ என்று பதிவிட்டு உள்ளார்.

பிக்பாஸ் மேடையில் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடிய சாண்டி! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகன், சண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில், முகன் அவர்கள் தான் பிக்பாஸ் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு அடுத்த இடத்தை சாண்டி மாஸ்டர் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், மேடையில் வைத்து தளபதி விஜயின்  பாடலை முகன் பாட, சாண்டி நடனமாடுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

we are the boysu! வெளிய வந்தும் விடலையாப்பா! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், இறுதியா முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சாண்டி,கவின், முகன் மற்றும் தர்சன் நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, பாடல்களை பாடி பிக்பாஸ் வீட்டையே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், இவர்கள் இயற்றிய பாடல்களில் we are the boysu பாடல் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடல்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர்கள், இந்த பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

தர்சன் காதலியுடன் பிக்பாஸ் வின்னர் முகன் மற்றும் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்,முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் நான்கு பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த நிகழ்ச்சியில், சந்தைகள், மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்றது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் ஷெட்டி முகன் மற்றும் அபிராமியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

முதலிடத்தை தட்டி சென்ற முகன்! மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன விருது?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மூன்றாவது சீசனை நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. மூன்று சீசனையும் உலகநாயகன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகன், லொஸ்லியா, சாண்டி, வனிதா, ஆனந்த் வைத்தியநாதன், மதுமிதா, ஷெரின், சாக்ஷி அகர்வால்,ரேஷ்மா, சரவணன், பாத்திமா பாபு ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில்வாராவாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டார். மதுமிதா, சரவணன், கவின் போன்றோர் இடையில் சில காரணங்களால் போட்டியில் தொடரவில்லை.
கடைசியாக சாண்டி, முகன், லாஸ்லியா, ஷெரின் என நால்வர் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில், ஷெரின் நான்காவது இடத்தையும், லாஸ்லியா மூன்றாவது இடத்தையும், சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்து பிக் பாஸ் மூன்றாவது சீசன் வெற்றியாளராக முகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதில் கேம் சேஞ்சேர்  எனும் விருது கவினுக்கும், டிசிப்ளின் எனும் நேர்மையாக விளையாடியதற்கான விருது இயக்குனர் சேரனுக்கும், சிறந்த ஆல்ரவுண்டர் போட்டியாளர் விருது தர்ஷனுக்கும், நட்போடு விளையாடியதற்கான விருது ஷெரினுக்கும், தைரியமான போட்டியாளருக்கான ( GUTS AWARD ) விருது வனிதாவிற்கும் வழங்கப்பட்டது.