ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ள போக்குவரத்து ஊழியர்கள்

கொரோனா தடுப்பிற்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர் போக்குவரத்து ஊழியர்கள்.   கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி … Read more

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் பேசுகையில்,4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.தீபாவளிக்கு, 4265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். தீபாவளி சிறப்பு பேருந்துகள், சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து … Read more

தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.

திமுகவினர் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்குகிறார்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மட்டும் 7-ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. மேலும் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு … Read more

பொங்கல் சிறப்பு பேருந்தில் 1.45 லட்சம் பயணிகள் பயணம்…அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…!!

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் , பயணிகளின் சிரமங்கள் குறித்தும்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு செய்தார் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சிறப்பு பேருந்து மூலமாக இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர் , பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, இதுவரை 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு … Read more